விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் எனும் தம்பதியினர் முதன்முறையாக உலக ஆமைகள் தினத்தை உருவாக்கினர்.
உலக ஆமைகள் தினம் ஓவ்வோர் ஆண்டும் மே 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
ஆமைகள் மற்றும் அவற்றின் மறைந்து வரும் வாழ்விடங்களை பாதுகாக்கவும் மக்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நாளாக இந்த நாள் உருவாக்கப்பட்டது.
விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் எனும் தம்பதியினர் முதன்முறையாக உலக ஆமைகள் தினத்தை உருவாக்கினர்.
ஆமைகளை அழிவிலிருந்து மீட்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த அமைப்பானது இதுவரை 3000 ஆமைகளை பராமரிப்பு இல்லங்களில் சேர்த்திருக்கிறது.
ஆமைகள் நீர்வாழ் தாவரங்களையே உணவாக உண்ணுவதோடு, சிறியவகை பூச்சிகள், நத்தைகள், புழுக்களையும் உண்ணுகின்றன. உலகின் பெரிய ஆமையினமான பேராமை 200 செ.மீ (6.6 அடி) நீளம் வரையும் 900 கிலோ கிராம் எடை வரையும் வளரும்.
ஆமைகள் மணிக்கு மூன்று மைல் வேகத்தில் செல்லக்கூடியவை என்றாலும் 300 ஆண்டுகள் வாழக்கூடியவை. சாதுவான குணம் கொண்ட ஆமைகள் சுறா, திமிலங்கலத்தின் இரையாவதும் மீனவர் வலையில் சிக்குவதும்தான் கவலைக்குரிய ஒன்றாகும்.
மேலும் கடல் மாசு காரணங்களாலும் கடல் ஆமைகளுக்கு ஆபத்து அதிகரித்து எதிர்கொண்டு வருகிறது.

