திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு செய்யப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் புயலாக கிளம்பியிருக்கும் இந்த விவகாரம், நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒருபோதும் நெய் வழங்கவில்லை என விளக்கமளித்துள்ளது அமுல் நிறுவனம்.
முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் விளக்கம் அளித்தது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பல தரப்பினர் மீது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.

