தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாளான இன்று (சூலை -07) கிண்டியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் வீரவணக்கம் செலுத்தினார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்..
அவர் கூறியதாவது…
தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி சனநாயக சக்திகளை அணிதிரட்டியவர். . பறையன் எனும் பெயரில் அமைப்பும் இதழும் தொடங்கி நடத்தியவர் எனினும் சாதி ஒழிப்பே அவரது இறுதி இலக்காகும். சனாதனத்தை வேரறுக்க புரட்சியாளர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றியவர். அவர் கனவை நனவாக்க இந்நாளில் உறுதியேற்போம்” என்று கூறினார்.



