ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தியதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாவர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று உயிரிழப்பும் காயங்களும் ஏற்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ. 5 லட்சம் மற்றும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 65 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை சேர்ந்த 11 பேருக்கு கல்வி தகுதி மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதே சரி என தீர்ப்பு வழங்கியது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் முதலமைச்சரும் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.
