Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பீகாரில் குற்றங்கள் அதிகரிக்க இதுதான் காரணமா…? காவல்துறை உயர் அதிகாரி சொன்ன பகீர் தகவல்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 24, 2025
in அரசியல் செய்திகள்
0
பீகாரில் குற்றங்கள் அதிகரிக்க இதுதான் காரணமா…? காவல்துறை உயர் அதிகாரி சொன்ன பகீர் தகவல்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பீகார் காவல்துறையின் கூடுதல் தலைமையக அதிகாரி குந்தன் கிருஷ்ணன் என்பவர் சமீபத்தில் ஊடகங்களிடம் பேசுகையில், “சமீபத்தில், பீகார் மாநிலம் முழுவதும் நிறைய கொலைகள் போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. கொலைகள் உள்ளிட்ட பெரும்பாலான குற்றங்கள் குறிப்பாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகமாக நடைபெற்றுள்ளன.

பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த மாதங்களில் வேலை இல்லாததால், மழைக்காலம் வரும்வரை இது தொடர்கிறது. மழைக்குப் பிறகு, விவசாய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வேலைகளில் பிஸியாகி விடுவதால் அப்படியே குற்றச் சம்பவங்கள் குறைகின்றன” என்று பேட்டி அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் ஊடகங்கள் தொடர்ந்து கொலைகளை மையமாக வைத்து செய்திகளை அதிகம் அளித்து வருவதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக அரசியல் தலைவர்களும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் கூறினார். “பீகார் முழுவதும் கொலைகள் நடக்கின்றன, குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.

ஆனால், ஊடகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கொலைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றன. தேர்தல்கள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளும் இதில் அதிக கவனம் செலுத்துகின்றன. உண்மையில் இதனை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம். இளைஞர்கள் பணத்திற்காக இதுபோன்ற குற்றச் செயல்களை அதிகளவில் செய்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

#WATCH | Patna: Bihar ADG (HQ) Kundan Krishnan says, “Recently, a lot of murders have happened in the whole of Bihar. Most murders happen in the months of April, May and June. This continues until the rains come, as most farmers do not have work. After the rains, people in the… pic.twitter.com/b1OsUEWGTr


— ANI (@ANI) July 17, 2025

மேலும், இந்த மாதம் முதல் ஒரு புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், ஒப்பந்த கொலையாளிகள் (கூலிப் படையினர்) என அனைவரின் தரவுத்தளத்தையும் உருவாக்கி அவர்கள் மீது ஒரு கண் வைக்கப்படும் என்றும் கூறினார். பீகாரில் சமீப காலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, இதில் குறிப்பிடத்தக்க நபர்களும் குறிவைக்கப்பட்டனர். உதாரணமாக பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா பாட்னாவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே பைக்கில் வந்த ஒரு நபரால் படுகொலை செய்யப்பட்டார். புன்புன் பாஜக கிசான் மோர்ச்சாவின் முன்னாள் தலைவரும், பாஜக தலைவருமான சுரேந்திர கேவத் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படி பீகாரில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் சாதாரண குடிமக்களை குறிவைத்து தொடர்ந்து கொலைகள் நடப்பது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது, சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பரவலாக கிடைப்பதே இதற்குக் காரணம் என்று காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 21, 2025 3:05 PM IST



.

Previous Post

பாமக பெயர், கொடியை அன்புமணி பயன்படுத்த தடைக் கோரி மனு! Anbumani

Next Post

பெருமையுடன் செல்கிறேன்! எம்பியாகப் பதவியேற்க தில்லி புறப்பட்டார் கமல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெருமையுடன் செல்கிறேன்! எம்பியாகப் பதவியேற்க தில்லி புறப்பட்டார் கமல்!

பெருமையுடன் செல்கிறேன்! எம்பியாகப் பதவியேற்க தில்லி புறப்பட்டார் கமல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In