Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடி முதலமைச்சராக இருந்தபோது ஒரே நாள் கலவரத்தின் போது 3 ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தார் :திருமா..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 16, 2024
in Default
1
மோடி முதலமைச்சராக இருந்தபோது ஒரே நாள் கலவரத்தின் போது 3 ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தார்  :திருமா..
100
SHARES
161
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோது ஒரே நாள் கலவரத்தின் போது 3 ஆயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தார் அதற்காக தான் மோடிக்கு பிரதமர் வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ் பரிசாக வழங்கியது

மோடியால் அவரது நண்பர் அதானி உலக அளவில் நான்காவது பணக்கார பட்டியலில் உயர முடிந்தது மோடி நண்பர் அதானி தான் வளர்ந்தாரை தவிர நாடு வளரவில்லை என்றும் நாட்டு மக்கள் வளரவில்லை என்றும் குற்றச்சாட்டு

எம்.பி.சி இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பாசிசத்தை வளர்க்க பார்க்கிறது பாமக என்றும் தமிழ்நாட்டில் பாசிச சக்தி வளரக்கூடாது என்பதை எதிர்த்து நிற்பவர் தமிழக முதல்வர் என்றும்,எம்.பி.சி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை அமல்படுத்திய வி.பி.சிங்குக்கு சிலை வைத்தவர் தமிழக முதல்வர் என்றும் திருமாவளவன் புகழாரம்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில் தமிழகம் முழுவதும் 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியே வெற்றி பெறும் என்றும்,வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரையில் எஸ்.சி மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு போல் எம்.பி.சி மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரை வழங்கப்பட்ட நிலையில் இதனை நடைமுறைப்படுத்தியவர் வி.பி.சிங் என்றும் இதனால் ஆத்திரமடைந்த பாஜக வி.பி சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்று ஆட்சியை கவிழ்த்தது. 1991 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் பரிந்துரையை ஆதரித்த கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் எம்.பி.சி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதற்கு ஆதரவு தெரிவித்த கட்சி விடுதலை சிறுத்தை கட்சி என்றும், ஆனால் மருத்துவர் ராமதாஸ் பிஜேபியை நண்பர் என்கின்றார். விடுதலைச் சிறுத்தை எதிரி என்கின்றார். அதனைப் புரியாமல் அறியாமல் உள்ள இளைஞர்கள் பிஜேபி சின்னத்தை ஊர் ஊராக வரைந்து வருவதாகவும் பிஜேபிகாரர்களுக்கு சின்னம் வரைவதற்கு தொண்டர்களே கிடையாது, ஊரில் வரைவதற்கு ஒரு பிஜேபி காரன் இல்லை,ஆனால் தன்னை நம்பிய வன்னிய சகோதர்களை விட்டு ராமதாஸ் பிஜேபி சின்னங்களை வரையவிட்டுள்ளதாகவும் தமிழகத்தில் ஒரு பாசிச சக்தியை வளர்ப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி துணை போகிறது என்றும், தமிழ்நாட்டில் பாசிச சக்தி வளரக்கூடாது என்பதை எதிர்த்து நிற்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும்,ஓ.பி.சி-க்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மண்டல் கமிஷன் பரிந்துரையை உத்தரவாக பிறப்பித்த அப்போதைய பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை வைத்து அழகு பார்க்க வேண்டும் என நினைத்தவர் தமிழக முதல்வர் என்றும்,

இரண்டு முறை பிஜேபி ஆட்சியில் இருந்தது போதும் என்றும், நரேந்திர மோடி 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தது போதும் என்றும், அதனால் இந்திய நாட்டு மக்கள் சந்தித்த அவலங்கள் போதும் என்றும், இந்த நாடு கெட்டு குட்டிச்சுவராக மாறி வருவதாகவும், குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது தான் அவருடைய நண்பர் அதானி ஒரு ஒப்பந்ததாரர் என்றும், அந்த ஒப்பந்ததாரரை இன்று அகில உலக அளவிலே புகழ்பெற்ற உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காவது இடத்திற்கு உயர முடிந்தது என்றால் அது யாரால் மோடியால் என்றும்,மோடியின் பினாமி தான் அதானி என்றும், பிரதமர் மோடியின் நண்பர் தான் வளர்ந்தாரே தவிர நாடு வளரவில்லை என்றும் நாட்டு மக்கள் வளரவில்லை என்றும், மோடி ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காகத்தான் ராகுல் காந்தி அவர்களும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒன்று சேர்ந்து வியூகம் அமைத்துள்ளதாகவும் அந்த வியூகத்தின் படி உருவானது தான் இந்தியா கூட்டணி என்றும்,மோடியால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு என்றும்,அதை விட முக்கியம் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பாதிப்பு என்றும்,

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது ஏற்பட்ட கலவரத்தில் 3,000 முஸ்ஸீம்கள் கொலை செய்யப்பட்டனர்.கலவரத்தில் 3,000 முஸ்ஸீம்களை கொலை செய்தமைக்காக நரேந்திர மோடிக்கு பிரதமர் வேட்பாளர் என்ற பரிசை தந்தது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.பாஜகவில் எத்தனையோ மூத்த தலைவர்கள் உண்டு அவர்களை எல்லாம் பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் மோடியை ஏன் பிரதம வேட்பாளராக அறிவித்தார்கள் என்றால் மோடி இயல்பிலேயே வன்முறையில் நாட்டம் கொண்ட நபர் என்றும் முஸ்லிம்கள் மீது கடுமையான வெறுப்பில் இருந்தவர் இதனால் ஆர்எஸ்எஸ் அவருக்கு பிரதமர் வேட்பாளர் என்ற பரிசை வழங்கியது என்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி பேசினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மட்டும் இன்றி தமிழக மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவதாக நினைத்து அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி இந்தியா கூட்டணியை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற செய்து இந்தியா கூட்டணி வலுப்பெற கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியில் மலையரசனுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Previous Post

மொத்தம் 15 கோடி வரி பாக்கி (6.6 கோடி GST பாக்கி)..

Next Post

20 ஆண்டுகளாக ஜாதி சான்று வழங்கப்படாததால் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
20 ஆண்டுகளாக ஜாதி சான்று வழங்கப்படாததால் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்.

20 ஆண்டுகளாக ஜாதி சான்று வழங்கப்படாததால் தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    திருமாவளவன் ஓட்டுக்காக எதையாவது பேசி வருவார் ஜம்மு காஷ்மீரில் இன்று வரை இந்துக்களால் வாழவே முடியவில்லை இதற்கு என்ன சொல்கிறார் திருமாவளவன் தேர்தல் நேரத்தில் இதுபோன்று ஓட்டுக்காக பேசுவது வாடிக்கையாகி ஆகிவிட்டது எனவே இதையெல்லாம் பொருட்படுத்த கூடாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In