ரிஷிவந்தியம் அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தாத திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனை கண்டித்தும் திமுக வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை இளைஞர்கள் மறித்து கருப்புக்கொடி காட்டி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது, இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்:
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,அந்த வகையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக ரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளரான மலையரசனை தலைமை கழகம் அறிவித்தது,
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது லக்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் திமுக வேட்பாளர் மலையரசணை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்றபோது அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்,
மேலும் எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதியான சாலை வசதி, இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக கூறி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள் ஆனால் இதுவரை எங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனை கண்டித்தும் கூட்டணி கட்சியினரை மறித்து கருப்பு கொடி காட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பிற்காக சென்ற காவல்துறையினர் கிராமத்து இளைஞர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் வேட்பாளர் மலையரசன் ஆகியோர் இளைஞர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்டு உங்களின் கோரிக்கை விரைவாக நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளித்த பின்னர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை கைவிட்டனர், மேலும் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளரை மறித்து கருப்பு கொடி காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

லக்கி நாயக்கன் பட்டி கிராமத்து இளைஞர்களின் கோரிக்கை நியாயமானது அதை நிறைவேற்றி கொடுக்க எம்எல்ஏ முன்வர வேண்டும் அந்த இளைஞர்கள் தங்களது எதிர்ப்பை சட்டரீதியாக கருப்புக்கொடி காட்டி வெளிப்படுத்தி உள்ளார்கள் அந்த இளைஞருக்கு எனது வாழ்த்துக்கள்