திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பேருந்து நிலையம் காந்தி ரோட்டில் பாபு என்பவருக்கு சொந்தமான பாரி பேக்கரி உள்ளது. அவர்களது குடோனில் பத்துக்கு மேற்பட்ட சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தது, அதன் அருகில் யாரோ குப்பையை எரித்ததால் தீ பரவி
குடோனுக்குள் சிலிண்டர் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் வேகமாக சிலிண்டர் தீப்பிடித்து வெடித்து அங்கிருந்த மொத்த குடோனும் முழுமையாக தீக்கிரையானது.இந்த நிலையில் மற்ற கடைகளும் தீ பரவ ஆரம்பித்தது, இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கிருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் மிகவும் போராட்டத்திற்கு பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


இந்த சிலிண்டர் விபத்துக்கு காரணம் அந்த பேக்கரி உரிமையாளரின் கவனக்குறைவே இருப்பினும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்