Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலகின் உயரமான நடராஜர் சிலை… தஞ்சாவூரில் தயாராகி டெல்லி ஜி 20 மாநாட்டில் இடம் பெறுகிறது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 26, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உலகின் உயரமான நடராஜர் சிலை... தஞ்சாவூரில் தயாராகி டெல்லி ஜி 20 மாநாட்டில் இடம் பெறுகிறது!
2
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லியில் அடுத்த மாதம் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜி 20 கூட்டமைப்பில் இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

ஜி20 மாநாட்டின் அரங்கில் வைப்பதற்காக பிரமாண்டமான  நடராஜர் சிலை தயாரிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில்  தங்கம், வெள்ளி, லெட், காப்பர், டின், பாதரசம், இரும்பு, ஜிங் உள்ளிட்ட எட்டு பொருட்களின் கலவையில் வெண்கலத்தாலான 28 அடி உயரம் கொண்ட  பிரம்மாண்டமான  சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 19 டன் எடை கொண்ட  இந்த சிலை தான் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது. ரூ.10 கோடி மதிப்பிலான இந்த சிலையை சுவாமிமலையைச் சேர்ந்த புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன்கள் ஸ்ரீகண்ட ஸ்தபதி, ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகியோர் கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்.

அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த சிலை  டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நடைபெற உள்ள டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. இதுபற்றி ஸ்ரீகண்டஸ்தபதி, ”இந்த சிலையை சிதம்பரம் கோனரிராஜபுரம் ஆகிய ஊர்களில் உள்ள நடராஜர் மற்றும் பிற சோழர் கால நடராஜர் சிலைகளை அடிப்படையாக வைத்து வடிவமைத்துள்ளோம்” என்றார்.

இந்த சிலையை வடிவமைத்து கொடுக்க மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்திடம் இருந்து கடந்த 2023 பிப்ரவரி மாதம்  ஆர்டர் வந்தது. இந்த பணியை முடிக்க 6 மாதங்கள் ஆகியுள்ளது. சிலை டெல்லிக்கு சென்றதும்  அங்கு சென்று இறுதி கட்டமாக சில பணிகளை முடிக்க உள்ளோம்” என்று கூறினார்.

.

Tags: இடமஉயரமனஉலகனசலடலலதஞசவரலதயரகநடரஜரபறகறதமநடடலஜ
Previous Post

போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தல் – முன்னாள் ராணுவ வீரரை கைது செய்தது என்ஐஏ

Next Post

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய மேலும் கால அவகாசம் நீட்டிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In