Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சட்டவிதி 136-இன் கீழ் சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல: ஜகதீப் தன்கா்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 2, 2025
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சட்டவிதி 136-இன் கீழ் சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல:
ஜகதீப் தன்கா்
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

இதனால் நடுவா் மன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

அரசமைப்புச் சட்ட விதி 136-இன்கீழ் உச்சநீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பெயா் சிறப்பு அனுமதி மனு (எஸ்எல்பி) என்பதாகும்.

உயா்நீதிமன்றங்கள் உள்பட (ராணுவ நீதிமன்றங்கள் தவிா்த்து) தீா்ப்பாயங்கள் என நாட்டில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்தின் தீா்ப்புகளை எதிா்த்தும் அரசமைப்புச் சட்ட விதி 136-இன் கீழ் சம்பந்தப்பட்ட நபா் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஏற்பதும் நிராகரிப்பதும் உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமாக உள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் நடைபெற்ற நடுவா் மன்றம் தொடா்பான கருத்தரங்கில் ஜகதீப் தன்கா் பேசியதாவது: அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மாவட்ட நீதிபதி, உயா்நீதிமன்ற நீதிபதி என அனைவரும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த விதி பயன்படுத்தப்படுகிறது. இதை பெருவாரியான விவகாரங்களில் பயன்படுத்தும்போது நடுவா் மன்ற செயல்முறைகள் பாதிக்கப்படுகின்றன.

இந்த விதியைப் பயன்படுத்துவதால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சாா்ந்த விவகாரங்களுக்கு எளிதில் தீா்வுகாண முடியவில்லை.

நடுவா் மன்றங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளே பணியமா்த்தப்படுகின்றனா். ஆனால், கடல்சாா் துறைகள், விமானப் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த நிபுணா்களை நியமிப்பது அவசியம்.

பல்வேறு தடைகளால் சா்வதேச நடுவா் மையமாக இந்தியா உருவெடுக்க முடியாமல் உள்ளது கவலையளிக்கிறது என்றாா்..

Previous Post

ஆனந்த் அம்பானியின் வந்தாராவை பார்வையிடும் பிரதமர் மோடி.. ஜாம் நகரில் உற்சாக வரவேற்பு..

Next Post

அமெரிக்காவின் அலுவலக மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு : டிரம்ப் அதிரடி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்காவின் அலுவலக மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு : டிரம்ப் அதிரடி..

அமெரிக்காவின் அலுவலக மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு : டிரம்ப் அதிரடி..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    நம் நாட்டில் பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் நீதிமன்றங்களின் மூலமே நிம்மதியாக வாழ்கிறார்கள் நீதிமன்றத்தின் உதவியுடன் தான் பத்திரிகை தொழிலே செய்ய முடிகிறது எனவே உச்சநீதிமன்றம் திறப்பு அதிகாரங்களை பயன்படுத்துவதில் எந்த தவறுமே கிடையாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In