Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்; விழுப்புரம் ஆட்சியரை நாடிய சாமானியர்; நடந்தது என்ன?!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 7, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
RTI மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்; விழுப்புரம் ஆட்சியரை நாடிய சாமானியர்; நடந்தது என்ன?!
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விழுப்புரம் மாவட்டம், கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்திருக்கிறார். இவர், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, “என்னுடைய அப்பா மோகன், எங்கள் ஊராட்சி செயலாளர் லட்சுமணனிடம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுவேண்டுமென்று கேட்டதற்கு சரியான தகவல் வழங்கவில்லை. அதனால், நான் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவலை கேட்டிருந்தேன். அதில், “திரு.மோகன் த/பெ பூங்கான் என்பவர் பெயரில் 2017-2018 ஆம் ஆண்டில் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ( TN2254633 ) வழங்கப்பட்டது” என்று தகவலை கொடுத்தார்கள். இந்த தகவலை நான் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். 

புகார் அளிக்க வந்த சுபாஷ்

நாங்கள் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் பலமுறை நேரில் சென்று கேட்டோம். அப்போது, அங்கு பணிபுரிந்த மேனேஜர் மற்றும் முன்னாள் ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர், “நீங்கள் காலி இடத்தில் கடக்கால் எடுங்கள். நாங்கள் உங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து தருகிறோம்” என்று கூறினார்கள். இதை நம்பி நாங்கள் எங்களுடைய நகைகளை வைத்து கடக்கால் போட்டபிறகும் எங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, ஐயா அவர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், எங்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் சுபாஷிடம் பேசிய போது, “அந்த வீட்டை கட்டுவதற்கான ஆணையை என் அப்பாவின் பெயரையே கொண்ட, அவ்வூரில் அரசு ஆவணங்களே இல்லாத ஒரு நபருக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு கொடுத்திருக்கிறார். ஆனால், என் தாத்தா பெயர் வேறு, அந்த நபரின் அப்பா பெயர் வேறு. இதுகுறித்து புகார் தெரிவித்தும், பல வருடமாக உரிய நடவடிக்கை இல்லாததால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தோம். மாவட்ட ஆட்சியர் அவர்களும், துறை சார்ந்த அதிகாரிக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்” என்றார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த சுபாஷ்

இந்த புகார் குறித்து கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமாரிடம் விளக்கம் கேட்டோம். “இது குறித்த புகார் எங்களுக்கு வந்தது. வங்கி கணக்கு எண் மட்டும் மாறி, வேறொருவர் பெயருக்கு தொகை சென்றிருக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கிராம செயலாளரை அழைத்து பேசினோம். ‘உங்கள் மீது புகார் வந்திருக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய பணத்தை சேருங்கள். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளோம். அவரும், உடனே பணத்தை தந்துவிடுவதாக கூறியுள்ளார். எனவே, அவரிடமிருந்து புகார்தாருக்கு உரிய பணத்தை சேர்த்துவிட்டு, வீடு கட்டும் பணியை தொடங்க ஏற்பாடு செய்திடலாம்” என்றார்.

.

Tags: RTIஅதரசசஆடசயரஎனனசமனயரதகவலதரயவநதநடநததநடயமலமவழபபரம
Previous Post

கும்பகோணம் | நாகரசம்பேட்டை அழகு நாச்சியம்மன் கோயிலில் துாக்கு தேர் திருவிழா

Next Post

3 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய இடத்தில் ஓட்டை-அரசு மருத்துவமனையில் அலட்சியமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய இடத்தில் ஓட்டை-அரசு மருத்துவமனையில் அலட்சியமா?

3 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய இடத்தில் ஓட்டை-அரசு மருத்துவமனையில் அலட்சியமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In