மும்பை: மாற்றுதிறனாளிபெண் ஒருவர் திருமண நாளன்று பதிவு சம்பிரதாயங்களை முடிக்க மும்பையின் கார் நகரில் உள்ள திருமணப் பதிவாளரின் இரண்டாவது மாடி அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டார். இதனால் அந்த திருமண பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..
அதிகாரி அருண் கோடேகரை இடைநீக்கம் செய்து மகாராஷ்டிர வருவாய்த் துறை புதன்கிழமை அறிக்கை (ஜிஆர்) வெளியிட்டது.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் மற்றும் தன்னை ஒரு ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் விராலி மோடி எனும் பெண் , கடந்த வாரம் X இல் ஒரு பதிவில், தனது திருமண நாளில் நகரத்தில் உள்ள திருமணப் பதிவாளரின் அலுவலகம் இரண்டாவது மாடியில் இருந்ததால் என்னை அங்கு தூக்கி சென்றனர். லிப்ட் இல்லை மற்றும் திருமண பதிவு வேலைகளை முடிக்க அதிகாரிகள் கீழே வர மறுத்துவிட்டனர்.
“இது எப்படி நியாயமாகும்? பிரதமரின் Accessible India பிரச்சாரத்தின் பயன் என்ன? நான் சக்கர நாற்காலியில் இருப்பவன் என்பதால், நான் விரும்பும் ஒருவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு உரிமை இல்லையா? திருமண நாள் அன்று யாராவது வழுக்கி விழுந்தால் என்ன செய்வது? அதற்க்கு யார் பொறுப்பு?” என்று கேட்டு அவர் பதிவிட்டிருந்தார்..
பல முறை பகிரப்பட்ட இந்த இடுகை, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடமிருந்து பதில் பெற வழிவகுத்தது.
இந்த பெண்ணிற்கு பதிலளித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் “அவர் நேர்கொண்ட கஷ்டத்திற்கு வருந்துவதாகவும், “சரியான மற்றும் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பதாகவும் கூறினார்.


இந்த அம்மா லஞ்சம் கொடுத்து இருந்தால் பதிவாளர் கீழே அனைத்து உபகரணங்களையும் ஆவணங்களையும் கொண்டு வந்து பதிவு செய்திருப்பார் லஞ்சம் கொடுக்காத காரணத்தால் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொண்டுள்ளார் பதிவாளர்களையும் பதிவாளர்களையும் பற்றி நாட்டுக்கும் நம் மக்களுக்கும் தெரியாதா என்ன இவர்களுடைய நேர்மையைப் பற்றி