சென்னை: எண்ணூர் பகுதியில் 40 மீனவர் கிராமங்களில் இருந்து இன்று மாபெரும் பேரணி ஆர்ப்பாட்டமும் கடையடைப்பும் நடைபெற்றது. தமிழக மின்சார வாரியம் கொசத்தலை ஆற்றை ஆக்கிரமிப்பு செய்து உயர் மின்னழுத்த கோபுரம் கட்டுவதாலும், இடிக்கும் கட்டிடங்களின் கழிவுகளை கொட்டுவதாலும், மின்சார வாரியம் சாம்பலையும் சுடுதண்ணியையும் ஆற்றில் விடுவதால் ஆற்றில் வாழும் உயிரினங்கள் கடந்த 30 வருடங்களாக முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அரசுக்கு கவனம் செலுத்தும் வகையில் போராட்டமும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.





