டெல்லி: லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை கோரி மனு தாக்கல் செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதிகபட்சமாக 120 நாட்களில் இருதரப்பு வாதங்களும் முடிக்க வேண்டும்.
முன்பு இருதரப்பு வாதங்களும் முடிக்க கால அவகாசம் இல்லாதிருந்தது. இப்போது குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் ஒருவர் தங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் தண்டனை குறைவாக கிடைக்கு… விசாரணையின் போது ஆவணங்களை சமர்ப்பிக்க எந்த ஏற்பாடும் இல்லை. அனைத்து ஆவணங்களையும் 30 நாட்களுக்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் எந்த காலதாமதமும் செய்யப்படாது”

