தமிழ்நாட்டில் முதன்முறையாக விழுப்புரம் மாவட்டம், வானூர் திருச்சிற்றம்பலத்தில் ‘மினி டைடல் பூங்கா’வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள தமிழ்நாட்டின் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இனிய நாள் இன்று.
மாநிலத்தின் முதல் Mini TIDEL மினி டைடல் பூங்காவை மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
ஐடிஇன்ஃப்ராவை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டுவந்து, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களில் உயர்தர வேலைகளை அணுகுவதை உறுதிசெய்வதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் அதன் அர்பணிப்பு பரவலாகும். இது ஆரம்பம் மற்றும் இன்னும் பல பூங்காக்கள் வர உள்ளன என்று அமைச்சர் TRB.ராஜா கூறினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ரூ. 31 கோடி செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

