Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 17, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை – மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

துணைக் கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ்

இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருடன் இணைந்து டு பிளெஸ்ஸிஸ் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளார்.

Pick up your phones, it’s your vice-captain calling ❤️ pic.twitter.com/W3AkYO4QKZ

— Delhi Capitals (@DelhiCapitals) March 17, 2025

தில்லி அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து டு பிளெஸ்ஸிஸ் பேசியதாவது: நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தில்லி அணி மிகவும் சிறப்பாக உள்ளது. அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். தில்லி அணியின் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாகவும், அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவதற்கு தயாராகவும் இருக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானைவிட சிறந்தது இந்திய அணி: பிரதமர் மோடி

40 வயதாகும் டு பிளெஸ்ஸிஸ் கடந்த மூன்று சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கேப்டனாக வழிநடத்தி வந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு மெகா ஏலத்துக்கு முன்பாக டு பிளெஸ்ஸிஸை ஆர்சிபி தக்கவைக்கவில்லை.

ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் ஏலம் போகாத டு பிளெஸ்ஸிஸ், ஏலத்தை நிறைவு செய்யும் விரைவு சுற்றில் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.





.

Previous Post

மார்ச் மாத பௌர்ணமி; `முடிஞ்சிடுச்சு’ன்னார் தலைவர் – `திக் திக்’ சம்பவத்தை நினைவுகூறும் மல்லை சத்யா |mallai sathya shares his old memories of boat accident with vaiko

Next Post

‘ஒற்றுமையோடு இருக்கிறோம்.. அதிமுக உடைபடும் என நினைப்பவர்கள் மூக்கு உடைபட்டு போனது’: எடப்பாடி பழனிசாமி பேட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ஒற்றுமையோடு இருக்கிறோம்.. அதிமுக உடைபடும் என நினைப்பவர்கள் மூக்கு உடைபட்டு போனது’: எடப்பாடி பழனிசாமி பேட்டி

'ஒற்றுமையோடு இருக்கிறோம்.. அதிமுக உடைபடும் என நினைப்பவர்கள் மூக்கு உடைபட்டு போனது': எடப்பாடி பழனிசாமி பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In