‘’பிரச்னைகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதால் நாங்கள் அதிக நேரம் பேசினோம்’’ – ஈபிஎஸ்
அதேவேளை, திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்கி இருந்ததாலேயே, மக்களுடைய பிரச்னைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைக்கும் விதமாக, பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களது கடமையை முழுமையாக நாங்கள் செயல்படுத்தினோம். பிரச்னைகள் அவ்வளவு இருப்பதால் தான், அவ்வளவு மணிநேரம் பேசவேண்டியிருந்தது. அதனால் தான் நாங்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டோம். அவங்க அதிக நேரம் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேசாததற்குக் காரணம், குற்றம் இல்லாத வகையில் நல்லாட்சியை நாங்கள் தந்தோம்.
