நேற்று தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குடியரசுத் தலைவரின் குறிப்புரை மூலம் மறுஆய்வு செய்யக் கோரியும் அதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் நேற்று மாலை நேரமே தேர்தல் பத்திரங்கள் தீர்ப்பை அமல்படுத்தக் கூடாது என்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலாவுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தெளிவுபடுத்துகிறது.
ஆதிஷ் அகர்வாலாவின் கடிதம் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சி எனக் கூறி அவரது கடிதத்தை உச்சநீதிமன்ற பார் கவுன்சில் கண்டித்துள்ளது மேலும் அவரது கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

