பாகிஸ்தானிலும் சில உலக நாடுகளிலும் ஹிட் அடித்த தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜட் (The Legend of Maula Jatt) திரைப்படம், இந்தியாவில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் பாகிஸ்தானில் பஞ்சாபி மொழியில் 1979ம் ஆண்டு வெளியான படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. பிலால் லஷாரி என்பவர் இயக்கியுள்ளார். பாகிஸ்தானின் முன்னணி நடிகர்களாக திகழும் ஃபவாத் கான், ஹம்சா அலி அப்பாஸி, மஹிரா கான் ஆகியோர் நடித்துள்ளனர்.
