Chennai oi-Mani Singh S
Published: Monday, July 3, 2023, 21:23 [IST]
சென்னை: சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த 13 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை தேவைப்பட்டதால் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படது. தற்போது செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிடக்கோரியும் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது “என் கணவரை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரின் கைதுக்கான காரணத்தை சொல்லவில்லை’ என்றும் கூறியிருந்தார். மணிப்பூர் வன்முறை வழக்கு: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் இருந்து வழக்கறிஞரும் திமுக எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன் வைத்தார். அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா காணொலி வாயிலாக ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இந்த வழக்கின் வாதங்கள் காரசாரமாக நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
While Senthil Balaji was arrested in the Unlawful Money Transfer Prohibition Act case, the court will give its verdict tomorrow in the case filed by his wife in Madras High Court alleging that he is in illegal detention.
Story first published: Monday, July 3, 2023, 21:23 [IST]

