Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘இண்டியா’ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு துவங்கியது..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 27, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
‘இண்டியா’ கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு துவங்கியது..!
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

‘கூட்டணி கட்சிகளோடு நடத்தும் தொகுதி பங்கீடு விஷயங்கள் குறித்து, வெளிப்படையான தகவல்களை தரப்போவதில்லை. அதேநேரம், பேச்சு அனைத்தும், வெளிப்படையாக திறந்த மனதுடன் ஏற்கனவே துவங்கி நடைபெறுகிறது’ என, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

காங்., மூத்த தலைவரும், பொதுச் செயலருமான ஜெய்ராம் ரமேஷ், புதுடில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

‘இண்டியா’ கூட்டணிக்குள், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு துவங்கிவிட்டது. அது, மேலும் தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்றவாறு சிக்கல்கள், சவால்கள் உள்ளன.

அந்தந்த மாநிலத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் கள நிலவரத்திற்கு ஏற்ப, ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிச்சயம், ஒரு தீர்க்கமான வடிவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மனதுடன் பேசுவோம்

தொகுதி பங்கீடு பேச்சை பொறுத்தவரையில், மனம் திறந்து இருக்கும்; வாய் மூடி இருக்கும். அதாவது, வெளிப்படையான மனதுடன் பேசுவோம். அதே நேரம், ஒரு முடிவு தெரியும் வரையில் வெளிப்படையாக தகவல்கள் தெரிவிப்பதை தவிர்ப்போம்.

கூட்டணிக்குள் முரண்பாடுகள், உரசல்கள் இருப்பதாக ஊடகங்கள் தான் பெரிதுப்படுத்தி வருகின்றன. முரண்பாடுகள் இருந்தால், பாட்னா, பெங்களூரு, மும்பை, புதுடில்லி என நான்கு இடங்களில் சந்தித்து இருப்போமோ? கூடிப் பேசியிருக்கத் தான் முடியுமா?

எங்களுக்குள் உள்ள ஒரே வேலை, தொகுதி பங்கீடு தான். அதை விரைந்து முடிக்கும்படி காங்கிரஸ் தலைமை கூறிவிட்டது. வேலைகள் ஜரூராக நடக்கின்றன.

பிரதமர் யார் என்பது முக்கியமில்லை. முதலில் தேர்தலை சந்திக்க வேண்டும்; வெற்றி பெற வேண்டும்; பார்லி.,க்குள் செல்ல வேண்டும். அதன்பின் தான் பிரதமர் தேர்வு.

நலத்திட்டங்கள்

அடிப்படை விஷயங்கள் தான் முக்கியம். முகம் யார் என்பது முக்கியமில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்து, மம்தா போன்றவர்கள் கூறுவதில் தவறில்லை. பா.ஜ.,வில் உள்ளவர்கள் போல, இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆமாம் சாமி போடும் ஆட்களல்ல.

தேர்தலில், கொள்கைகள், கோஷங்கள், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றை தான் முன்வைக்க வேண்டும். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் தேர்தல் தான் நடக்க வேண்டுமே தவிர, தனி நபரை துாக்கிப் பிடித்து, அழகிப் போட்டிகள் நடத்தக்கூடாது. எனவே, மோடிக்கு எதிராக யார் என்ற கேள்வியை கிளப்புவது அபத்தம்.

வரும் 28ல், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நடக்கும் பேரணி என்பது லோக்சபா தேர்தல் நடவடிக்கைகளுக்கான துவக்கமாக அமையும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் காங்., எடுக்கும்.

கூட்டணியில் பெரியண்ணன் தோரணையில் காங்., நடந்து கொள்ளவில்லை.

கூட்டணியில் உள்ள பெரிய கட்சி நாங்கள். எங்களுக்கு உள்ள பொறுப்பு, கடமை ஆகியவற்றை உணர்ந்துள்ளோம். அனைவரையும் அரவணைத்தே செல்வோம்.

அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்றுவது மட்டுமே எங்கள் குறிக்கோள். எனவே, அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் களப்பணி ஆற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உ.பி.,யில் காங்.,கிற்கு எட்டு?

இதற்கிடையில், முதற்கட்டமாக உ.பி.,யில் தொகுதி பங்கீடு பேச்சு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதன்படி காங்.,கிற்கு எட்டு தொகுதிகளை தருவதற்கு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய லோக் தளத்திற்கு, இரண்டு முதல் மூன்று தொகுதிகள் வரை கிடைக்கலாம் என தெரிகிறது. உ.பி.,யை அடுத்து, பீஹாரில் தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

.

Previous Post

நமோ டீ கடை : அரசு திட்டங்களை விளக்க புதிய முயற்சி..

Next Post

பாரத் ஜோடோ யாத்ரா 2.0 : இந்தியாவின் மேற்கு முதல் கிழக்கு முனை வரை ராகுலின் அடுத்த பயணம் அறிவிப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாரத் ஜோடோ யாத்ரா 2.0 : இந்தியாவின் மேற்கு முதல் கிழக்கு முனை வரை ராகுலின் அடுத்த பயணம் அறிவிப்பு..

பாரத் ஜோடோ யாத்ரா 2.0 : இந்தியாவின் மேற்கு முதல் கிழக்கு முனை வரை ராகுலின் அடுத்த பயணம் அறிவிப்பு..

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தொகுதி பங்கீடு என்கிற பெயரில் இனிமேல் தான் சண்டையே வரும் இந்த பங்கீடு முடியட்டும் அதன் பிறகு இந்த இந்தியா கூட்டணியின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In