ஹமிர்பூர்: ஹிமாச்சல பிரதேசத்தில், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பெயரிலான நமோ டீ ஸ்டால்களை பா.ஜ.,வினர் திறந்துள்ளனர்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை, ‘டீ விற்றவர்’ என, காங்கிரசார் விமர்சித்தனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ., சார்பில் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் பிரதமர் பெயரில் உள்ள இரண்டு எழுத்துகளை வைத்து ‘நமோ டீ ஸ்டால்’ எனப்படும் தேநீர் கடைகள் திறக்கப்பட்டன. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை
பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நமோ டீ ஸ்டால்கள் திறக்கப்பட்டுள்ளன.
பா.ஜ., வின் இளைஞர் அணி சார்பில் ஹமிர்பூர், நடாவுன், போரான்ஞ், சுஜான்பூர், பத்சார் பகுதிகளில் ஐந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ‘இன்றைய இந்தியாவின் சிற்பி நரேந்திர மோடி’ என்ற வாசகத்துடன் திறக்கப்பட்ட கடைகளில் மத்திய அரசின் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை