கடந்த 2001-2006 ஆண்டு அதிமுக ஆட்சி காலகட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2006 ஆம் திமுக ஆட்சியில் ஆண்டு அனிதா ரதாகிருஷ்ணன், அவருடைய மனைவி ஜெயகாந்தி, அவருடைய தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த் பத்மநாபன், ஆனந்த் மகேஸ்வரன், ஆனந்த் ராமகிருஷ்ணன் ஆகிய 7 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தங்களையும் இணைக்க வேண்டும் என அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு நீதிபதி சாமிநாதன் அமர்வின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுப்பில் சென்றுள்ளதால் வரும் ஜனவரி 24ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

