Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

துணை மேயர் வீட்டில் தாக்குதல் – திமுக மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
துணை மேயர் வீட்டில் தாக்குதல் – திமுக மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்.
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மாநகராட்சி துணை மேயர் வீட்டில் தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை தூண்டிய திமுக வட்ட செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை துணை மேயர் வீட்டில் ரவுடிகள் தாக்குதல்… அலுவலகத்தையும் அடித்து  உடைத்ததால் பரபரப்பு ; போலீசார் குவிப்பு!! - Update News 360 | Latest Tamil  News Online ...

மதுரை மாநகராட்சி ஜெய்ஹிந்த்புரம் வார்டு 80-ன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலரான டி.நாகராஜன் துணை மேயராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள வீரகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். வீட்டின் அருகிலேயே அவரது அலுவலகமும் இயங்கி வந்துள்ளது. இன்று (ஜன.9) மாலை 6:30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் போதையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்து அவரது அலுவலகத்தின் கண்ணாடி, இரு சக்கர வாகனத்தை உடைத்ததுடன், வீட்டின் கதவை உடைத்து தாக்கி ஆபாச வார்த்தைகளில் கத்தி கூச்சலிட்டு சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி துணை மேயர் நாகராஜன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் ஜெய்ஹிந்த்புரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட இதே பகுதியை சேர்ந்த லோகேஷ் மற்றும் முகமது இஸ்மாயில் ஆகிய இரு இளைஞர்களை ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் கைது செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தூண்டி விட்ட நபர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலை வாயில் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரையில் துணை மேயர் வீடு, அலுவலகம் மீது தாக்குதல்; டூவீலர்களை  சேதப்படுத்திய கும்பல் | Attack on Deputy Mayor house office in Madurai two  wheelers vandalized - hindutamil.in

துணை மேயர் அளித்த புகார் மனுவில், குற்றவாளிகளை தூண்டி விட்ட திமுக 80வது வார்டு வட்ட செயலாளர் ஏ.கே.கண்ணன் மற்றும் துணை செயலாளர் முத்துவேல் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். பின், எம்.பி. சு.வெங்கடேசன் அளித்த பேட்டியில், “மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகளை தூண்டி விட்ட நபர்களையும் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை மேயர் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாக காவல்துறை உறுதி அளித்துள்ளது. தமிழக அரசு மீதும், காவல்துறையும் மீது நம்பிக்கை இருக்கிறது. காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாளை மாலை கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது” என்றார்.

Previous Post

ஸ்டாலின் குறித்து சொன்ன வார்த்தை.. செல்லூர் ராஜூவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

Next Post

திமுக அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜன.24ல் விசாரணை.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜன.24ல் விசாரணை.!!

திமுக அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜன.24ல் விசாரணை.!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In