தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. கணவன் – மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தெலுங்கில் வெளியிட முடிவுசெய்துள்ளனர்.