காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே, சென்னைக்கு அருகே 17-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு அதிகமிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
