Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Nobel Prize : மூன்று பேராசிரியர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; எதற்காக தெரியுமா? | 3 Immigrants To America Win 2024 Nobel Prize In Economics

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2024
in அரசியல் செய்திகள்
0
Nobel Prize : மூன்று பேராசிரியர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு; எதற்காக தெரியுமா? | 3 Immigrants To America Win 2024 Nobel Prize In Economics
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு ஒரு நாட்டின் செழிப்பைப் பாதிக்கின்றன” என்பது பற்றிய ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை இந்த ஆண்டு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 1967 இல் பிறந்த டேரன் அசெமோக்லு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ், யுகேவில் இருந்து 1992ம் ஆண்டு PhD முடித்தவர். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர்.

1963-ல் இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் பிறந்த சைமன் ஜான்சன், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1989ம் ஆண்டு PhD முடித்தவர். தற்போது தான் படித்த அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

1960ல் பிறந்த ஜேம்ஸ் ஏ. ராபின்சன், 1993-ல் அமெரிக்காவின் நியூ ஹெவன்-ல் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர். தற்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் இருக்கிறார்.



.

Previous Post

Tamilnadu News Live October 15, 2024: TOP 10 NEWS: சாம்சாங் போராட்டம் வாபஸ் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வரை! டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates october 15 2024

Next Post

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது – அதீத கன மழை கொட்டித் தீர்க்கும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது – அதீத கன மழை கொட்டித் தீர்க்கும்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது - அதீத கன மழை கொட்டித் தீர்க்கும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In