Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“நிவாரண பொருட்களைக் மக்களுக்கு விநியோகம் செய்யும் கட்டமைப்பையே திமுக அரசு ஏற்படுத்தவில்லை.!” – R.B.உதயகுமார் காட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 9, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
“நிவாரண பொருட்களைக் மக்களுக்கு விநியோகம் செய்யும் கட்டமைப்பையே திமுக அரசு ஏற்படுத்தவில்லை.!” – R.B.உதயகுமார் காட்டம்.
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை வெள்ளம் குறித்தும், அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கடந்த சில நாட்களில் பெய்த மழையால் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. சாலைகள், வீடுகள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளது. தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட காரணத்தால் பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

மழை வெள்ளம்
மழை வெள்ளம்

தமிழக அரசு வெள்ள மீட்புப் பணியில் போர்க்கால நடவடிக்கை எடுக்காமல், செயல்பாடத அரசாக உள்ளது. 450 க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்று லட்சம் வீடுகளை மழைநீர் சூழ்ந்திருக்கிறது. 5 நாட்களுக்கு மேல் ஆகியும் தண்ணீரை வெளியே எடுக்க முடியவில்லை. மழைநீரோடு கழிவுநீரும், கச்சா எண்ணெய்யும் கலந்துள்ளதால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாய நிலை உள்ளது.

வெள்ளநீர் வடியாததாலும், மின்சாரம் இல்லாததாலும் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நிறைமாத கர்ப்பிணிகள், குழந்தைகள் உணவுக்கு கையேந்தும் நிலைமை உள்ளது. குழந்தைகளுக்கு பால் கேட்டு மக்கள் கண்ணீருடன் போராடி வருகிறார்கள்.

 மக்களை சந்தித்து ஆறுதல் கூற அமைச்சர்கள் தயாராக இல்லை. அதிகாரிகளை நியமித்திருக்கிறோம், அமைச்சர்களை நியமித்து இருக்கிறோம் என்று அறிவிப்புகள் வந்து கொண்டே இருங்கிறது, ஆனால் செயல்பாடு இல்லை.

மழை நீர், கழிவுநீர் தேங்கி இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் இயற்கை உபாதை கூட கழிக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஒருவேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியவில்லை, ஐந்து நாள்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம், மழை நீரை வெளியேற்ற நாதி இல்லையா? என்று மக்கள் எழுப்பும் வேதனைக் குரல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  காதுகளுக்கு கேட்கிறதா? 

சென்னை மழை வெள்ளம்
சென்னை மழை வெள்ளம்

மழை நீரை வெளியேற்ற ராட்சத பம்புகளுக்கு டீசல் போட தயாராக இல்லாத நிலையே உள்ளது. எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களத்துக்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் பல மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டபோது மீட்பு பணியில் ஈடுபட்டோம். ஆனால், இன்று நான்கு மாவட்ட பாதிப்புக்கே அரசு தடுமாறுகிறது. பல மாவட்டங்களிலிருந்து அனுப்புகிற நிவாரண பொருட்களைக் மக்களுக்கு விநியோகம் செய்ய கட்டமைப்பை அரசு ஏற்படுத்தவில்லை.

மிக்ஜாம் புயலிருந்து நான்கு மாவட்ட மக்களை காப்பாற்றமுடியாத நீங்கள், 38 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தால் எப்படி மக்களைக் காப்பாற்றுவீர்கள் என்பதுதான் அச்சமாக உள்ளது.

மழைநீர் வடிகால் பணிக்கு செலவு செய்த 4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.

Previous Post

சக மனிதனின் துயரம் நம் துயரம்; முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 லட்ச ரூபாய் வழங்கிய வைரமுத்து.

Next Post

அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி..!

அவசர டெல்லி பயணம்… அமித் ஷாவை சந்திக்கும் உதயநிதி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In