
மும்பை: "அரசியல் எதிரிகளை எல்லாம் அச்சுறுத்துகிற ஏவல் அமைப்புகளாக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜக ஆட்சி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பாஜக நடத்திவரும் பாசிச ஆட்சியின் முடிவுக்கு 'கவுன்ட்டவுன்' ஆரம்பமாகி உள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை: "இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி பாட்னாவில் கூடும்போது 19 கட்சிகள், பெங்களூரில் கூடும்போது 26 கட்சிகள், மும்பையில் கூடிய இன்று 28 கட்சிகள் என இண்டியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை அடைந்து வருகிறது. எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல், எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த 'விளம்பரதாரராக' பிரதமரே செயல்பட்டு வருகிறார். இண்டியா கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் மொத்தத்தில் இவர்கள் இருவருக்குமே கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது