பிரேசிலில் நடக்கும் செவி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு தொடரில் கலந்துகொள்ள தமிழ்நாட்டு வீரர்களுக்கு நிதியுதவி வழங்க மத்திய அரசின் விளையாட்டு ஆணையம் மறுப்புஅ தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழ்நாடு அரசின் சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ₹25 லட்சத்தை அவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
பிரேசிலில் வரும் 14 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை செவி மாற்றுத்திறனாளிகளுக்கான First World Deaf Youth Games நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஜி.தமிழ்ச்செல்வன் – சுதர்சன் மற்றும் வர்சினி – பிரியங்கா – சுபஸ்ரீ ஆகியோர் தடகளப் பிரிவில் பங்கேற்கவுள்ளனர்.
இவர்களின் விமானப்பயணம் – தங்குமிடம் – விசா உள்ளிட்ட செலவினங்களுக்காக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம், ரூ.25 லட்சத்துக்கான காசோலையை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தர நம் மாற்றுத்திறன் வீரர் – வீராங்கனையரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.



