நான் எவரெஸ்ட் ஏறிய அனுபவங்களைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டதற்கு மிக்க நன்றி. உங்களுடைய வார்த்தைகளும் உத்வேகம் தரும் பேச்சுகளும் என்னை நெகிழவைத்துவிட்டன. தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் எப்போதும் நன்றாக இருப்பீர்கள். நான் உங்களுக்காக எப்போதும் வேண்டிக்கொள்வேன். மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் ராஜசேகர் பச்சை.
அஜித் ரசிகர்கள் ராஜசேகர் பச்சைக்கு வாழ்த்துகளைக் குவித்துவரும் நிலையில், அஜித்தைச் சந்தித்தது குறித்து அவரிடமே பேசினோம், “நான் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுவிட்டு சென்னை வந்தபின்பு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அஜித் சாரின் வாழ்த்தும் சந்திப்பும் நானே எதிர்பார்க்காதது. என்னை அவரது வீட்டிற்கு அழைத்த அஜித் சார், எனது எவரெஸ்ட் பயணம் குறித்தும் சந்தித்த சவால்கள் குறித்தும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். ஒரு விளையாட்டு வீரராக வாழ்த்துகளையும் தெரிவித்தார். அவருடன் இருந்த ஒரு மணிநேரத்தை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ஆனால், என்ன பேசினேன், பேசினோம் என்பதை வெளியில் சொல்லமுடியாது. இது தலயின் அன்புக்கட்டளை!” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

