Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 7, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 6) குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

260 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அந்த அணி 31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், லோர்கான் டக்கர் 28 பந்துகளில் அதிரடியாக 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஆண்டி மெக்பிரின் மற்றும் மார்க் அடாய்ர் ஜோடி சேர்ந்தனர்.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட், ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். மார்க் அடாய்ர் 91 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும். ஆண்டி மெக்பிரின் 132 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில், அயர்லாந்து 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜிம்பாப்வே தரப்பில் முஸராபானி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நிகராவா 2 விக்கெட்டுகளையும், டிரெவர் குவாண்டு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

267 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

அயர்லாந்து 260 ரன்களில் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், அயர்லாந்தைக் காட்டிலும் ஜிம்பாப்வே 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையும் படிக்க: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இதனை கற்றுக் கொண்டேன்: ஷஃபாலி வர்மா

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக நிக் வெல்ச் 173 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, முஸராபானி 47 ரன்களும், கைட்டானோ மற்றும் மத்வீர் தலா 26 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கார்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆண்டி மெக்பிரின் 3 விக்கெட்டுகளையும், மார்க் அடாய்ர் 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

76 ரன்கள் முன்னிலை

7 ரன்கள் பின் தங்கிய நிலையில் அயர்லாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 83 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர் மூர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 32 ரன்களுடனும், கர்டிஸ் கேம்பர் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க: இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவைக் காட்டிலும் 76 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.



.

Previous Post

பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.. ஊழல் தடுப்பு விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்

Next Post

“பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்… அல்வா சாப்பிடும் முதல்வர்” -சீமான் கண்டனம் | NTK chief seeman slams CM stalin and his govt on girl students facing sexual assault issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்… அல்வா சாப்பிடும் முதல்வர்” -சீமான் கண்டனம் | NTK chief seeman slams CM stalin and his govt on girl students facing sexual assault issue

``பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எங்கும் பாலியல் கறைகள்... அல்வா சாப்பிடும் முதல்வர்" -சீமான் கண்டனம் | NTK chief seeman slams CM stalin and his govt on girl students facing sexual assault issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In