Last Updated:
தெலங்கானா சுரங்க விபத்தின் மீட்புப் பணிகள், 2 நாட்களில் நிறைவடையும் என்று அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சுரங்க விபத்தின் மீட்புப் பணிகள், 2 நாட்களில் நிறைவடையும் என்று அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட நல்கொண்டா மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டுசெல்லும் வகையில், கால்வாய் அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியின்போது, கடந்த சனிக்கிழமை, நாகர்கர்னூல் மாவட்டம், தோமலபென்ட்டா என்ற பகுதியில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதில், இரண்டு பொறியாளர்கள் உட்பட 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
மீட்புப் பணி 5 நாட்களைக் கடந்த நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம ரெட்டி, 2 நாட்களில் மீட்புப் பணி நிறைவடையும் என்று கூறினார்.
சுரங்கப்பாதை அமைக்கப் பயன்படுத்தப்படும் துளையிடும் இயந்திரம் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டதாகவும், அதனை துண்டு துண்டாக வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். அதன் பிறகு மீட்பு பணி வேகமெடுக்கும் என்று உத்தம ரெட்டி குறிப்பிட்டார்.
February 27, 2025 2:57 PM IST

