நான் தலைமறைவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
‘நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன்.
நான் இன்று தருமபுரி செல்கிறேன், ஒருநாள் காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை ஏன் விரட்டுகின்றனர்?
நான் ஆஜராவேன் என்று உறுதியளித்த பிறகும் என் வீட்டில் சம்மன் ஒட்டியது ஏன்?
வழக்கில் என்னை மீண்டும் மீண்டும் விசாரித்து அசிங்கப்படுத்தவே முயற்சி நடக்கிறது. பெரியார் பற்றி நான் பேசியதால் பெண்ணை வைத்து என்னை அடக்க முயற்சி செய்கிறார்கள்.
காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இந்த தீவிரத்தைக் காட்ட வேண்டும்.
நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது, என்ன செய்ய முடியும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
