Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டிற்காக உயிரைக் கொடுக்க தயார்…! நெட்டிசன்களை ஈர்த்த தேஜ் பிரதாப் யாதவின் பதிவு…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 9, 2025
in அரசியல் செய்திகள்
0
நாட்டிற்காக உயிரைக் கொடுக்க தயார்…! நெட்டிசன்களை ஈர்த்த தேஜ் பிரதாப் யாதவின் பதிவு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 09, 2025 4:43 PM IST

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலை தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்த முயன்று மூக்குடைபட்டுள்ளது பாகிஸ்தான் ராணுவம். எனினும், எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக அப்பாவி இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

News18News18
News18

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” நடத்தியதால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், விமானியாக பயிற்சி பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் நாட்டிற்கு சேவை செய்ய முன்வந்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலை தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்த முயன்று மூக்குடைபட்டுள்ளது பாகிஸ்தான் ராணுவம். எனினும், எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக அப்பாவி இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சிலர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நாட்டு குடிமக்கள் பலரும், தங்களது தேச பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதில் சாதாரண குடிமக்கள் முதல் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் அடங்குவர். இந்நிலையில் சமீபத்தில் X-ல் ஒரு பதிவை பகிர்ந்துள்ள பிரபல அரசியல் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ், தனது பைலட் உரிமத்தின் புகைப்படத்தை வெளியிட்டார். தனது பைலட் பயிற்சியைப் பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு பங்களிக்க விரும்புவதாக கூறி உள்ளார்.

“எனது பைலட் பயிற்சி நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்க முடியுமானால், தேஜ் பிரதாப் யாதவ் என்ற நான் எப்போதும் நாட்டிற்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். மேலும், நான் தேசத்திற்காக என் உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தால் அதற்கும் தயாராக இருக்கிறேன். அப்படி நடந்தால், நான் என்னை அதிர்ஷ்டசாலி என்று கருதுவேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் 140 கோடி இந்தியர்கள் இந்திய ராணுவத்துடனும், அரசாங்கத்துடனும் உள்ளனர். இந்தியா நீடூழி வாழ்க! இந்திய ராணுவம் வாழ்க! ஜெய் ஹிந்த்!” என்று பதிவில் குறிப்பிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

पायलट की ट्रेनिंग अगर देश के काम आ सकती है तो,मैं तेज प्रताप यादव हर समय देश की सेवा के लिए तत्पर हूँ।

आपके जानकारी के लिए बता दू की मैने भी पायलट की ट्रेनिंग ले रखी है और देश के लिए मेरी जान भी चली जाए तो अपने आपको भाग्यशाली समझुगा।

जय हिंद…#TejPratapYadav #Bihar… pic.twitter.com/e5fmGfcNK7


— Tej Pratap Yadav (@TejYadav14) May 7, 2025

ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பழி தீர்க்க சமீபத்தில் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’-ஐ தொடங்கி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களைத் தாக்கியழித்தது. இந்திய மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ஈடுபட்ட முக்கிய ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர்கள் மற்றும் முகாம்களை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனிடையே தேஜ் பிரதாப் யாதவ் பதிவை பார்த்த பல நெட்டிசன்கள் பலவிதமான எதிர் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். சில பயனர்கள் “நீங்கள் வைத்திருக்கும் உரிமம் Flight Radio Telephone Operator License, இதை வைத்துக்கொண்டு விமானத்தை ஓட்ட இயலாது” என குறிப்பிட்டுள்ளனர். ஒரு சிலர் நாட்டிற்காக சேவை செய்ய முன்வந்துள்ள இவரது ஆர்வத்தை பாராட்டி உள்ளனர்.



.

Previous Post

ஜெய்சல்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

Next Post

ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'ஜெய்ஹிந்த் யாத்திரை'

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'ஜெய்ஹிந்த் யாத்திரை'

ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'ஜெய்ஹிந்த் யாத்திரை'

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In