ஜெய்சல்மரில் ‘வெடிகுண்டு போன்ற’ பொருள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் மாவட்டத்தின் கிஷன்காட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கோட்வாலி காவல் நிலையப் பகுதியின் கீழ் கிஷன்காட்டின் முன் அமைந்துள்ள ஜோகிஸ் காலனியில் உள்ள நர்சரிக்கு அருகே இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கோட்வாலி காவல் அதிகாரி பிரேம் தன், அது வெடிகுண்டு போன்ற பொருளாகத் தெரிகிறது எனக் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்ய கிஷன்காட் விரைந்துள்ளனர். அது உயிர்ப்புடன் உள்ளதா அல்லது செயல் இழந்ததா என்பது தெரியவில்லை.

