தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.
ஆனால், சட்டமன்றத்தில் தொடர்ந்து பேச அனுமதிக்கப்படாததால், செங்கோட்டையனைத் தவிர, எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க அனைத்து எம்.எல்.ஏ-க்களும், ‘யார் அந்த தியாகி?’, ‘டாஸ்மாக் ஊழலுக்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் அரசே பதவி விலகு’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள் சென்றபிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “தான் சிக்கியிருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ… விழுந்த நேரத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் அதிமுக தொண்டர்கள்தான் இன்றைக்குத் தியாகிகளாக இருக்கிறார்கள்.
முதலமைச்சர் பதவியை வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ அந்த அம்மையார்தான் இன்றைக்குத் தியாகியாக இருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

