கேரள வெடிவிபத்தை பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி சமூக பதட்டத்தை உருவாக்கும் RSS ஆதரவாளர் “தமிழ் பொக்கிஷம் விக்னேஷ்” மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்று நெட்டீசங்கள் தமிழக காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரளாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் தானாக சரணடைந்துள்ள நிலையில் யூடியுபர் விக்னேஷ் தமிழ்நாட்டில் பதற்றம் விளைவிக்கும் நோக்கத்தில் கேரள வெடிவிபத்தையும் பாலஸ்தீனத்தோடு தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளது அவரது தவறான உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்றும், காவல் துறை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று X தளத்தில் காவல் துறையை tag செய்து trend செய்து வருகின்றனர்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு இதுபோல ஒரு பொய் செய்தியை வெளியிட்டு பின்பு ஒரு நபர் இதெல்லாம் போயசெய்தி என்று நிருபித்த பிறகு அந்த பதிவை மன்னிப்பு கூறி delete செய்தார். அதுவும் அந்த செய்தி ஒரு மதகலவரத்தை தூண்டும் அளவிற்கு மோசமானதாகும். இது போல பொய் செய்திகள் அவர் பெருமளவில் வெளியிட்டு பின்பு மன்னிப்பு கேட்டு அழித்துள்ளார். ஆனாலும் அவர் தனது போக்கை இது வரை மாற்றிக்கொள்ளவே இல்லை என்று நெட்டீசங்கள் வருத்தப்படுகின்றனர்.

