Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்: அரசாணை வெளியீடு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல்: அரசாணை வெளியீடு..!
156
SHARES
252
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழக பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சேலம் மாவட்ட கலெக்டரிடம் பியூஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதும், யூடியூப் சேனல் ஒன்றைச் சேர்ந்த ராஜவேல் நடராஜன் என்பவர் மீதும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 153, 153ஏ, 505 (இருவேறு சமுதாயங்களுக்கு இடையே மத ரீதியான வெறுப்பை உருவாக்குவது) மற்றும் 120பி (சதித்திட்டம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதுகுறித்து மாநில குற்றவியல் தலைமை வக்கீலின் சட்ட ரீதியான கருத்தை அரசு கேட்டது. அவர், அண்ணாமலை பேசிய பேச்சில், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தும் உள்நோக்கம் இருக்கிறது.

மத்திய அரசு-ஷகின் அப்துல்லா ஆகியோருக்கு இடையேயான வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட்டு, ‘வெறுப்பை உருவாக்கும் வகையில் பேசி, அது இந்திய தண்டனை சட்டத்தின் 153ஏ, 153பி, 295ஏ, 505 ஆகியவற்றின் கீழ் வருவதாக இருந்தால், யாருமே புகார் செய்யாத நிலையிலும்கூட மாநில அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம். குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளது என்று கருத்து தெரிவித்தார்.

மாநில குற்றவியல் தலைமை வக்கீலின் சட்ட ரீதியான கருத்தை கவனமாக பரிசீலித்ததில், அண்ணாமலை பேசிய பேச்சு, வெவ்வேறு மதத்தினருக்கு இடையே கசப்பையும், வெறுப்பையும், பகையையும், ஒருமைப்பாடு சீர்குலைவையும் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டுள்ளதாக கூறப்படுவதில் அரசு திருப்தி அடைகிறது.

மேலும் அந்த பேச்சுக்காக இந்திய தண்டனை சட்டத்தின் 153ஏ மற்றும் 505 ஆகிய பிரிவின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு தொடரலாம் என்று அரசு திருப்தி அடைகிறது.

எனவே அந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்கு தொடரவும், சம்பந்தப்பட்ட கோர்ட்டு குற்ற முகாந்திரத்தை ஏற்கலாம் என்றும் குற்ற விசாரணைமுறைச் சட்டத்தின் 196-ம் பிரிவின் கீழ் தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

சமூகத்தில் கலவரத்தை தூண்டும் “தமிழ் பொக்கிஷம்” சேனல் – மீண்டும் அதே தவறு… – பறந்த போலீஸ் கம்ப்ளைன்ட்..

Next Post

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவா? அவரது மனைவி ஹைகோர்ட்டில் அவசர மனு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவா? அவரது மனைவி ஹைகோர்ட்டில் அவசர மனு..!

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்க முடிவா? அவரது மனைவி ஹைகோர்ட்டில் அவசர மனு..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குழப்பமானது ஏனென்றால் அண்ணாமலை என்பவர் சாதாரண தனி நபர் அவர் அரசின் மிக உயர்ந்த பதவியில் இல்லாதவர் அப்படி இருக்கையில் அண்ணாமலை மீது வழக்கு தொடரவும் காவல்துறையில் புகார் செய்யவோ எவரிடமே அனுமதி வாங்க வேண்டியது இல்லை அப்படி இருக்கையில் கவர்னர் ஒப்புதல் தந்து விட்டார் என்று கூறுவது வேடிக்கையானது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In