மத்தியப்பிரதேச மாநிலத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவை இன்று தொடக்கம்!
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இன்று 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நாட்டில் இதுவரை 18 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்போது முதல் முறையாக ஒரே நேரத்தில் 5 வழித்தடங்களில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் தொடக்கப்பட உள்ளன. இந்த 5 ரயில்கள் இணைந்தால், நாட்டின் மொத்த வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.

