ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில் …
” ஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். Asian Athletics Association-ன் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும்.” என்று கூறியுள்ளார்.

