Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 12, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

போலி பாஸ்போர்ட் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 12) தெரிவித்துள்ளது.

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியில் இருந்த காலத்தில் அவரது மனைவி நடத்தும் டிராவல் ஏஜென்சி மூலம் போலி ஆவணங்கள் அடிப்படையில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூன்று மாதத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான வழக்கை விசாரித்து முடிக்க கியூ பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த விசாரணையை கண்காணிக்கும்படி எஸ்.பி.சி.ஐ.டி – ஐ.ஜிக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், போலி பாஸ்போட் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் வாராகி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி, கங்காபூர்வாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, “மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் டிஜிபி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான புகார்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று தமிழக அரசுக்கு டிஜிபி அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த தகவல் கடந்த செப்டம்பர் மாதம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அப்போது நீதிபதிகள், “அரசு கடிதம் கிடைத்தா?” என்று மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மனுதாரர் தரப்பில், அதுகுறித்த தகவலை கேட்டு தெரிவிப்பதாக பதிலளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜனவரி 31-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Previous Post

தேர்தல் ஆணையர் நியமன சட்ட மசோதா… திமுக கடும் எதிர்ப்பு..!

Next Post

“பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது..!” – L.முருகன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது..!” – L.முருகன்

"பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது..!” - L.முருகன்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அரசு அதிகாரிகளுக்கு எதிரான புகாரை காவல்துறையினர் விசாரிக்கும் போது இதுபோன்ற வழக்கமாக புகாரின் மீது எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறி முடிப்பது சாதாரண வழக்கங்கள் ஆனால் பொதுமக்கள் மீது புகாரே இல்லாத இல்லாவிட்டாலும் இல்லை குற்றமே தவறு செய்யாவிட்டாலும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டமும் சாதாரண பொது மக்களுக்கு வேறு மாதிரியான சட்டமும் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In