Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள்! – 94999 88009 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண் அறிவிப்பு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள்!  – 94999 88009 என்ற ஹெல்ப்லைன் தொலைபேசி எண் அறிவிப்பு.
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழ்நாடு அரசின் பணிபுரியும் மகளிருக்கென பிரத்தியேக விடுதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான  உதவி தொலைபேசி   94999 88009 என்ற எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. விடுதிகளில் அறை தேவைப்படும் மகளிர் இந்த தொலைபேசி எண்ணையோ அல்லது இணையதளம் மூலம் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவின் கொச்சி மாநகராட்சியில், பெண்கள் மட்டுமே தங்கக்கூடிய, மலிவு விலையிலான பிரத்யேக தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று தமிழ்நாட்டிலும் மகளிருக்கென பிரத்யேக தங்கும் விடுதி அமைக்கப்பட்டு உள்ளது.  ,தமிழ்நாட்டில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும் செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பையும்  தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கடந்த 13ந்தேதி (ஜூலை 2023) திருச்சியில் கட்டப்பட்டுள்ள  பணிக்கு செல்லும் மகளிருக்கான  அரசு தங்கும் விடுதியை  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பணித்திறனில் பெண்களின் பங்களிப்பு இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவையாக உள்ளது. இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகளை பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது என தெரிவித்திருந்ததார்.

தமிழக அரசின் ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ சார்பில் சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, நெல்லை, தஞ்சை, வேலூர், விழுப்புரம் ஆகிய 9 நகரங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் என மகளிர்  இவ் விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற மகளிருக்கான பிரத்யேக விடுதிகள் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

மகளிர் தங்கும் விடுதியில், 24 மணி நேர பாதுகாப்பு, பார்கிங், இலவச WiFi, உணவு, டிவி என பல வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதிகளில் 15 நாட்கள் வரை குறுகிய காலமாகவும் தங்கிக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94999 88009 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறியலாம்.

www.tnwwhcl.in என்ற இணையதளத்தில் விடுதிகளின் முகவரி, கட்டணம், முன்பதிவு ஆகிய விபரங்களை காணலாம்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Previous Post

விவசாயிகளை திமுக அரசு மிரட்டி அச்சுறுத்துவது கொடுங்கோன்மையின் உச்சம்..!

Next Post

INDIA கூட்டணி மணிப்பூருக்கு செல்ல திட்டம் – கண்காணிகிறது மத்திய உளவுத்துறை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
INDIA கூட்டணி மணிப்பூருக்கு செல்ல திட்டம் – கண்காணிகிறது மத்திய உளவுத்துறை..!

INDIA கூட்டணி மணிப்பூருக்கு செல்ல திட்டம் - கண்காணிகிறது மத்திய உளவுத்துறை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In