நெருக்கடியான நேரத்தில் கேரளத்துக்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்தும், கேரள அரசிற்கு தேவையான உதவிகள் வழங்கிட தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதையும் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் நிலச்சரிவு நிகழ்வுகள் மற்றும் அதனால் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோனதைக் குறித்து அறிந்து மிகவும் வேதனைக்குள்ளானேன்.
உதவி கேட்டால் தான் செய்ய வேண்டும் என்பது முடிவல்ல அதாவது உதவியாகாது. கேட்டாலும் கேட்காவிட்டாலும் கேட்காமலே இருந்தாலும் செய்ய வேண்டும்