ஒருவழியாக உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இதில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. மறுபக்கம், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில், பெண் ஒருவர் போட்டியிட்டபோதும் பிரிஜ் பூஷனின் நெருங்கிய நபரே வெற்றிபெற்றார். அதன்பின்னர், அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


இவ்வாறாக ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, மக்களவைத் தேர்தலும் நெருங்கியது. இந்த சூழலில் பிரிஜ் பூஷனுக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் பின்னடைவு என்பதாலும், அதேசமயம் ஆறுமுறை எம்.பி என்ற அவரின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்பதற்காகவும், அவரின் மகனுக்கு பா.ஜ.க சீட் வழங்கியது. இருப்பினும் உத்தரப்பிரதேச மக்கள் பிரிஜ் பூஷனின் மகனுக்குத் தோல்வியைப் பரிசளித்தனர்.
இன்னொருபக்கம், பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கில் விசாரணையும் நடந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க தனக்கு இன்னொரு வாய்ப்பு தராது என்று பிரிஜ் பூஷன் தெரிவித்திருக்கிறார். பரஸ்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த பிரிஜ் பூஷன், “எனக்குத் தெரியும் பாஜக எனக்கு இன்னொரு வாய்ப்பு தராது. அதேசமயம், நான் எந்தத் தவறையும் செய்யாதபோது, அதை எவ்வாறு ஒப்புக்கொள்வேன்?” என்றார்.

கமெண்ட் செய்ய விரும்பவில்லை