தன்னிச்சையாக விளக்க கடிதம் – நாம் தமிழர் கட்சி நிர்வாகி அதிரடி நீக்கம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக திருச்சி எஸ்பிக்கு தன்னிச்சையாக விளக்க கடிதம் கொடுத்த வழக்கறிஞர் பாசறை மாநில செயலாளர் சேவியர் ஃபெலிக்ஸ் கட்சியில் இருந்து நீக்கம். தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. பொதுப்பிரிவு மாணவர்கள் காலை 10 மணி முதல் வரும் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம்.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
