Last Updated:
Rakesh Kishore | உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் அங்கீகாரம் பார் கவுன்சில் மூலம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 7 அடி உயர சிதிலமடைந்த விஷ்ணு சிலையை மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தள்ளுபடி செய்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் கடந்த 6ஆம் தேதி காலணி வீச முயன்றார்.
பணியில் இருந்த காவலர்கள் ராகேஷ் கிஷோரை தடுத்த நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், ராகேஷ் கிஷோரின் உறுப்பினர் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
October 09, 2025 5:40 PM IST
தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் அங்கீகாரம் ரத்து : உச்சநீதிமன்ற பார் கவுன்சில் உத்தரவு

