Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எச்-1பி விசா எதிரொலி: தொடர் சரிவில் பங்குச் சந்தை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
எச்-1பி விசா எதிரொலி: தொடர் சரிவில் பங்குச் சந்தை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த வாரத்தில் 2-ம் நாளாக இன்று(செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,147.37 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 283.83 புள்ளிகள் குறைந்து 81,876.14 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89.20 புள்ளிகள் குறைந்து 25,113.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் பங்குச் சந்தைகள் ஓரளவு ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், இந்த வாரம் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பங்குச்சந்தையில் குறிப்பாக ஐடி பங்குகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்றும் ஐடி பங்குகள் அதிகம் விற்கப்பட்டு வருகின்றன. அதேபோல வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.

இன்று மும்பை பங்குச்சந்தை மிட்-கேப் பங்குகள் 0.55%, ஸ்மால்-கேப் பங்குகள் 0.52% சரிந்தன.

மொத்தமாக 1,555 பங்குகள் ஏற்றத்திலும் 2,318 பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன. 207 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.

நிஃப்டியில் மாருதி (+2.09%), ஐஷர் மோட்டார்ஸ் (+1.67%), டாடா மோட்டார்ஸ் (+1.24%), எம்&எம் (+1.11%), பஜாஜ் ஃபைனான்ஸ் (+0.74%) ஆகியவை ஏற்றமடைந்தன.

அதேநேரத்தில் அல்ட்ராடெக் சிமென்ட் (-1.82%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-1.28%), டைட்டன் (-1.26%), சன் பார்மா (-0.94%), டிரென்ட் (-0.93%) அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகும்.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து ரூ. 88.53 -ஆக இருந்தது.

Sensex down 350 pts, Nifty below 25,100: US visa concerns among key factors behind market fall

இதையும் படிக்க | அக். 14ல் சட்டப்பேரவை கூடுகிறது: அப்பாவு



.

Previous Post

“மக்கள் பணத்தில் தலைவர்களுக்கு சிலை அமைக்கக் கூடாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம் | இந்தியா

Next Post

“திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்” – அங்கன்வாடி ஊழியர்கள் | “DMK has not fulfilled its election promises” – Anganwadi Workers’ Association

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்” – அங்கன்வாடி ஊழியர்கள் | “DMK has not fulfilled its election promises” – Anganwadi Workers’ Association

``திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்" - அங்கன்வாடி ஊழியர்கள் | ``DMK has not fulfilled its election promises'' - Anganwadi Workers' Association

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In