Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை!' – கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் ஸ்டாலின் உருக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
`என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை!' - கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் ஸ்டாலின் உருக்கம்
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்துவைத்தார். உடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அமைச்சர் துரைமுருகன், எம்.பி-க்கள் கனிமொழி, சிவா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர். முன்னதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலைஞர் கோட்டத்தை திறந்துவைப்பதாக இருந்தது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா – முதல்வர் ஸ்டாலின்

அதற்கான திறப்பு கல்வெட்டும் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நிதிஷ் குமாரின் வருகை ரத்தானது. அதனால், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதேபோல முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏலக்காய் மாலை அணிவித்து, சிறிய தேர் ஒன்றைப் பரிசளித்தார்.

கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வான்புகழ் வள்ளுவருக்கு கோட்டம் கண்ட தலைவருக்கு திருவாரூரில் கோட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. என் தந்தைக்கு, தாய் எழுப்பிய அன்புக்கோட்டை. கருணாநிதி நலிவுற்றபோது நானும், சகோதரியும் இந்த நிலத்தை வாங்கினோம். இதில்தான் தற்போது, தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்தக் கோட்டம் கட்டப்பட்டிருக்கிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா

கோட்டத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கினார் எ.வ.வேலு. இது அமைய காரணமான அனைவருக்கும் நன்றிகள். பிறந்த ஊரான திருக்குவளையைக் காதலித்தவர் கலைஞர். அவர் எத்தனை தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும் இறுதியாக வந்தது திருவாரூருக்குத்தான்.

திராவிட மாடல் ஆட்சியை கலைஞருக்கு காணிக்கையாக நடத்திக் கொண்டிருக்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார் நிதிஷ்குமார். இந்திய அரசியலில் ஆளுமையாக இருந்தவர் கலைஞர்.

ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு, சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ. அதை அணைக்க வேண்டும். மீண்டும் பா.ஜ.க-வை ஆள அனுமதிப்பது, அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் கேடு. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம், நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்றார்.

Tamil News Live Today : திருவாரூரில் `கலைஞர் கோட்டம்’ – ஜூன் 20-ம் தேதி திறந்து வைக்கிறார் நிதிஷ் குமார்

.

Tags: அனபககடட039உரககமஎழபபயஎனகடடமகலஞரதநதககதயதறபபவழவலஸடலன
Previous Post

மணிப்பூர்: பாஜக அரசு நீடிப்பதில் சிக்கல்! 9 பாஜக எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி- டெல்லியில் மனு!

Next Post

ஒரே ஆண்டில் இது 2வது முறை.. துருக்கியில் மாத சம்பளம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட் !

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரே ஆண்டில் இது 2வது முறை.. துருக்கியில் மாத சம்பளம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட் !

ஒரே ஆண்டில் இது 2வது முறை.. துருக்கியில் மாத சம்பளம் வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In