Chennai oi-Shyamsundar I
Updated: Wednesday, June 14, 2023, 9:55 [IST]
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்லும் பட்சத்தில் அவரின் அமைச்சரவை பொறுப்புகள் வேறு அமைச்சருக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாலை 3 மணிக்கும், அதன்பின் பொழுது விடிந்த பின்பும் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். நேற்றே தலைமை செயலாளர் இறையன்புவிற்கு போன் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். நிலைமை எப்படி இருக்கிறது, என்னென்ன அறைகளில் சோதனை நடக்கிறது. விதி மீறல்கள் செய்யப்படுகிறதா என்று முதல்வர் ஸ்டாலின் போனில் ஆலோசனை செய்து உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறார். அதோடு அதிகாரிகளும் மாறி மாறி தலைமை செயலாளர் இறையன்புவிற்கு போன் செய்துள்ளனர். இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு போன் செய்து இந்த விவகாரம் குறித்து மாற்றி மாற்றி பேசினார் காலை மீட்டிங்: இன்று நடைபெற்ற ஆலோசனையில், சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது, செந்தில் பாலாஜிக்கு மருத்துவ உதவிகள் வழங்குவது, செந்தில் பாலாஜிக்கு எந்த வழக்கறிஞரை களமிறக்குவது, அவர் கைதாகி நீண்ட காலம் சிறையில் இருக்கும் பட்சத்தில் அமைச்சரவை பொறுப்புகளை யாருக்கு கொடுப்பது, உடனே பெயில் வாங்குவது எப்படி, கரூரில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது எப்படி என்பது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளார். அமைச்சரவை மாற்றம்: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்லும் பட்சத்தில் அவரின் அமைச்சரவை பொறுப்புகள் வேறு அமைச்சருக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. முக்கியமாக அமைச்சரவை மாற்றப்பட்டலும், பாலாஜியை, இலாகா இல்லாத மந்திரியாக வைத்திருக்கவும் யோசிக்கிறார் ஸ்டாலின் என்று கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மதுவிலக்கு (டாஸ்மாக்) மற்றும் மின்சாரம் என்று இரண்டு முக்கிய பொறுப்புகளை வகிப்பதால், அவர் சிறையில் இருக்கும் போது அதை கூடுதல் பொறுப்பாக ஒருவர் கவனித்தே ஆக வேண்டும் என்பதால் கண்டிப்பாக அமைச்சரவை பொறுப்பு கூடுதலாக ஏற்கனவே இருக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி கே.என்.நேரு அல்லது தங்கம் தென்னரசு வசம் மின்சாரத்துறை மட்டும் கூடுதல் பொறுப்பாக தரப்படலாம் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர். அதாவது சீனியர்களில் ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி, நேரு கடும் முயற்சி. குறிப்பாக இவர்கள் மின்சாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள். ஆனால், மின்சாரத்தை உதயநிதி அல்லது பி.டி.ஆரிடம் கூடுதல் பொறுப்பாக கொடுக்க முதல்வர் யோசிப்பதாக தகவல். அதே சமயம் மதுவிலக்கு யார் வசம் என்ற தகவல் இல்லை. குறிப்பாக, டாஸ்மாக் இலாகாவை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என சீனியர்கள் வலியுறுத்தவிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஸ்டாலினிடம், போக்குவரத்துத்துறை அமைச்சராக கண்ணப்பன் இருந்த போது, அவரது துறையின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அதை வைத்து அவரது அமைச்சர் பதவியை மாற்றினீர்கள். அமைச்சர் பி.டி.ஆருக்கு எதிரான ஆடியோ விவகாரத்தில் அவரது இலாகாவும் மாற்றப்பட்டது. ஆவடி நாசருக்கு எதிராக புகார்கள் வந்ததும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினீர்கள். தற்போது, செந்தில் பாலாஜி கைதே ஆகி உள்ளார். அதனால், கட்சி, ஆட்சி இரண்டின் இமேஜும் விமர்சிக்கப்படுகிறது. இதனை சரிசெய்ய, குறைந்த பட்சம் டாஸ்மாக் அமைச்சரிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குங்கள் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தவிருக்கிறார்கள் மூத்த அமைச்சர்கள் என்று கூறப்படுகிறது. சமீபத்தில்தான் மாற்றம்: சமீபத்தில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டது.தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு ஆண்டு முடிவில் சில அமைச்சர்களை மாற்ற முடிவு செய்துள்ளார். மேலும் ஐடி துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல் அமைச்சர் சாமிநாதன் தமிழ் வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த கைது காரணமாக மீண்டும் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Is CM Stalin planning to change the cabinet amid the arrest of Minister V Senthil Balaji?

